கனமழை: அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.