ஏற்காட்டில் தொடர் மழை: மலைப்பாதையில் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தற்சமயம் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்காட்டில் தற்சமயம் குளிர் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் பலத்த மழை காரணமாக மலை பாதையில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இந்த நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வீழ்ச்சிகளில் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர்.