திருவண்ணாமலையில் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவண்ணாமலையில் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;

Update: 2022-11-01 17:48 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், சில பகுதிகளில் தொடர் சாரல் மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணி வரை பனி பொழிவும் இருந்தது.

தொடர்ந்து 10.30 மணி அளவில் இருந்து திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்களும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் கையில் குடை பிடித்தப்படி சென்றனர். இந்த தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்