வடமாநிலங்களில் கனமழை:மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

வடமாநிலங்களில் கனமழை காரணமாக மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது

Update: 2023-07-10 20:22 GMT


வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, சர்ஹிந்த், நங்கல் அணை, சண்டிகர், சனக்வால், சக்ரான்பூர், அம்பாலா கன்டோன்மென்ட், டெல்லி ஆகிய வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே சண்டிகரில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு மதுரை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது.

மறுமார்க்கத்தில், நாளை (புதன்கிழமை) மதுரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு சண்டிகர் புறப்படும் ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கான முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை முழுவதுமாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்