மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதில் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் பதிவானது.;
விடிய, விடிய மழை
மேற்குதிசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
இந்த மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இதில் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 98 மி.மீட்டர் மழை பதிவானது.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று மதியத்திற்கு பிறகு வெயில் அடித்தது.
மழை அளவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி.மீட்டரில் வருமாறு:-கொள்ளிடம்-98, மணல்மேடு-97, மயிலாடுதுறை-52, சீர்காழி-47, தரங்கம்பாடி-5 . மாவட்டத்தின் சராசரி மழையளவு 60.68 ஆகும்.