தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.;

Update: 2023-05-20 07:53 GMT

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் தவித்தனர். எனினும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பெய்த மிதமான மழையால், அப்பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்