தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-11-28 08:28 GMT

சென்னை,

தெற்கு அந்தமான் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுமேலும் வரும் 30-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்