விராலிமலையில் கனமழை

விராலிமலையில் கனமழை பெய்தது.;

Update:2023-10-22 00:03 IST

விராலிமலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்