வால்பாறையில் கன மழை;ஆறுகளில் வெள்ளப்பெருக்கு சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் பெய்த கன மழை காரணமா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-04 15:14 GMT

வால்பாறை

வால்பாறையில் பெய்த கன மழை காரணமா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை

வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை குறைந்த நிலையில் அவ்வப்போது ஒரு சில எஸ்டேட் பகுதிகளிலும், வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் அட்டகட்டி, ஆழியாறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  வால்பாறை நகர் பகுதியில் மிதமான மழை பெய்தது. ஆனால் கருமலை, அக்காமலை எஸ்டேட், அக்காமலை புல்மேடு பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

 வால்பாறை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வ ிநாயகர் சிலைகள் இந்த நடுமலை ஆற்றில் கரைக்கவிருந்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் வால்பாறை பொள்ளாச்சி-மலைப்பாதை சாலையில் பெய்த கனமழை காரணமாக 14-வது மற்றும் 15-வது கொண்டை ஊசி வளைவுக்கும் இடையே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதையத்து போக்குவரத்து சீரானது. அதன்பின்னர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. இதேபோல் வால்பாறையில் உள்ள ஆறுகளில்  பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

---

Image1 File Name : 12604701.jpg

---

Image2 File Name : 12604702.jpg

----

Reporter : C.JOSEPH KUMAR Location : Coimbatore - VALPARAI

Tags:    

மேலும் செய்திகள்