திருச்சி, உப்பிலியபுரம் பகுதிகளில் பலத்த மழை

திருச்சி, உப்பிலியபுரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.;

Update: 2023-10-16 20:19 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருச்சியில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மத்திய பஸ் நிலையம், ரெயில் திருமண மண்டபம், பழைய கலெக்டர் அலுவலகம் என பல்வேறு இடங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. தொடர்ந்து நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.

இதேபோல் நேற்று மாலை உப்பிலியபுரம், பச்சைமலை, பி.மேட்டூர், மங்கப்பட்டி, புளியஞ்சோலை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அப்பகுதிகளில் உள்ள சிற்றோடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சம்பா உழவுப் பணிகளுக்கு ஆயத்தமான விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வாத்தலைஅணைக்கட்டு-11.2, மணப்பாறை-7.6, முசிறி-20, நவலூர்குட்டப்பட்டு-9.5, துவாக்குடி-5.1, தென்புறநாடு-4, பொன்மலை-39.4, விமானநிலையம்-19.6, திருச்சி ஜங்ஷன்-42, திருச்சி டவுன்-58.3. மாவட்டத்தில் சராசரியாக 9.03 மி.மீ., ஒட்டு மொத்தமாக 216.7 மி.மீ. மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்