திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து நள்ளிரவு வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.