தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூரில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இந்நிலையில் மாலை சுமார் 6.45 மணியளவில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை பெய்தது. நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், புகழிமலை, காகிதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், வாங்கல், நெரூர், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சில இடங்களில் மின் வினியோகம் தடை பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.