சிவகங்கையில் பலத்த மழை

சிவகங்கையில் பலத்த மழை பெய்தது

Update: 2023-07-16 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை நகரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் பெய்தது. இதனால் நகரில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

Tags:    

மேலும் செய்திகள்