வத்திராயிருப்பு பகுதிகளில் கனமழை

வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.;

Update: 2022-10-09 18:42 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கனமழை

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 8,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த சாரல் மழையானது சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டி தீர்த்தது. கனமழையின் காரணமாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் மழைநீரானது ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்