பெரியகுளத்தில் கனமழை: மரம் முறிந்து விழுந்து பள்ளி சுவர் சேதம்
பெரியகுளத்தில் பெய்த கனமழையால் மரம் விழுந்து பள்ளி சுவர் சேதமடைந்தது
பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென இடி- மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சுற்று சுவர் சேதமடைந்தது. இதேபோல் பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் அருகே இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் பள்ளி சுவர் சேதமடைந்தது. பெரியகுளம் பகுதியில் பல இடங்களில் தென்னை மரங்கள் உள்ளிட்ட பல மரங்களும் சாய்ந்து விழுந்தன.