நொய்யல்- அரவக்குறிச்சி பகுதியில் கனமழை

நொய்யல்- அரவக்குறிச்சி பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2022-09-02 18:36 GMT

நொய்யல், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், திருக்காடுதுறை, மரவாபாளையம், புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள வற்றிய கிணறுகளில் நீரூற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பயிர்கள் நன்கு செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் தார் சாலை ஓரங்களில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி கனமழை பெய்தது. பிறகு விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்