நாகை மாவட்டத்தில் பலத்த மழை

நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2022-08-22 17:06 GMT

வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ேவதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பலத்த மழை

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. பின்னர் சாரல் மழையாக பெய்ய தொடங்கி பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது.

இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வேளாங்கண்ணி

மேலும் தாழ்வாக இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த மழை குறுவை நெற்பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, பரவை, மேலப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை 3 மணி நேரம் நீடித்தது. பல்ேவறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நாகை-திட்டச்சேரி

நாகை, நாகூர், திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, குத்தாலம், நரிமணம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளான தேவூர், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி ஆந்தக்குடி, காக்கழனி, செருநல்லூர், இரட்டைமதகடி, வெண்மணி, இருக்கை, கூத்தூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்