கோத்தகிரியில் பலத்த மழை

கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது.;

Update: 2023-08-06 23:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிது. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணி முதல் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிரான சீதோஷ்ண காலநிலையுடன் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாைலயில் முன்னால் ெசன்ற வாகனங்கள் ெதாியவில்ைல. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்ட படி வாகனங்களை இயக்கினர். பின்னர் மழை நின்ற உடன், பனிமூட்டமும் படிப்படியாக விலகியது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் உயரவும், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்