கரூர்-நொய்யல் பகுதிகளில் பலத்த மழை

கரூர்-நொய்யல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.;

Update: 2022-12-25 18:58 GMT

கரூர் ஜவகர் பஜார், வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ேநற்று மாைலயில் இருந்து இரவு வரை தொடர்ந்து பலத்தமழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்களும் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்து கொண்டு சென்றனர். இந்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்