அரியலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேபோல் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று திடீரென மாலை 3 மணியளவில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.