ஆற்காட்டில் பலத்த மழை
ஆற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அனல் காற்று வீசியது. இதனால் மதிய வேளையில் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது.
இந்தநிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.