பலத்த மழை எதிரொலி: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொதுமக்கள்
போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.;
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணை, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக போடி அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கரையோரம் குளிக்கவோ வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதையும் மீறி ஆபத்தான முறையில் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.