பலத்த மழையால் ஏரிகள் நிரம்பின
பலத்த மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன.;
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது.
இதில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கழுமங்கலம், முனியத்தரியன்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மாண்கொண்டான், சொழங்குறிச்சி, கச்சிப் பெருமாள், துளாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், ஏந்தல், அழிசுகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக உடையார்பாளையம் பகுதியில் உள்ள வேலப்பன் செட்டி ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் மழையின் காரணமாக விவசாய்கள் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் தவித்தனர்.
உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் வெளியூர் சென்று வர முடியாமல் தவித்தனர்.