அரியலூரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 9-ந் தேதி மாண்டஸ் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 1 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது. இதனால் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.