நாகை, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளான தேவூர் இருக்கை, ராதாமங்கலம், வெண்மணி, பட்டமங்கலம், இலுப்பூர் சத்திரம், வடக்காலத்தூர், கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி, சிகார், ஆந்தக்குடி, காக்கழனி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் ஆகிய பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ெபருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.