தஞ்சை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Update: 2023-08-14 19:45 GMT

சுதந்திரதின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவில்கள், ரெயில் நிலையங்கள், ரெயில்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் கொண்டு வந்த உடமைகளை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், சீனிவாசன், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். சென்னையில் இருந்து வந்த உழவன் எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் ஏறி பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அதேபோல் தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் சென்ற பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டிகள் மற்றும் பார்சல் ஆபிஸ் போன்ற இடங்களில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தண்டவாளங்களையும் நவீன கருவி மூலம் போலீசார் சோதனையிட்டனர். ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் மர்ம பார்சல்கள் அல்லது பொருட்கள் ஏதாவது கிடந்தால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என பயணிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்