ரெயில் முன் பாய்ந்து சுகாதார ஊழியர் தற்கொலை

திண்டிவனத்தில் ரெயில் முன் பாய்ந்து சுகாதார ஊழியர் தற்கொலை போலீசார் விசாரணை;

Update: 2023-06-25 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த ஆசூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் வேலுச்சாமி(வயது 29). இவர் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக தற்காலிக ஊழியராக பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் வேலுச்சாமி நேற்று மாலை திண்டிவனம், தீர்த்தகுளம் ரெயில்வே கேட்டில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து திண்டிவனம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியாகி கிடந்த வேலுச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி் வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்