குட்கா பயன்படுத்திய தொழிலாளி உடல் நலம் பாதிப்பு

மார்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பயன் படுத்திய தொழிலாளி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து செல்போன் மூலம் விற்பனை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-16 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பயன் படுத்திய தொழிலாளி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து செல்போன் மூலம் விற்பனை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது32). வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் சென்றார். அங்குள்ள கழிவறை சுவரில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டிருந்தது. அதில் 'கேட்டது கிடைக்கும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்த ராஜேஷ் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ராஜேசை மார்த்தாண்டம் கீழ்ப்பம்மம் பகுதிக்கு வருமாறு கூறினார்.

குட்கா விற்பனை

மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதிக்கு ராஜேஷ் சென்றதும் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அவரிடம் இருந்து ரூ.100 பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட சிறிய பாக்கெட் குட்கா பொருட்களை கொடுத்து விட்டு சென்றார். அதை பெற்றுக்கொண்ட ராஜேஷ் அந்த குட்காவை வாயில் போட்டு மென்றார். அதை பயன்படுத்தியவுடன் ராஜேசுக்கு தலைசுற்றல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ராஜேசுக்கு குட்கா விற்றதாக திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த அனஷ் (31) என்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 3½ கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்