கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய கவர்னர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய கவர்னர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.;

Update: 2022-12-07 18:45 GMT

வள்ளியூர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய கவர்னர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு நிதியுதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 3, 4-வது அணுஉலைக்கான கட்டுமான பணிகள், 5, 6-வது அணுஉலைக்கான அடித்தளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ரஷிய நாட்டின் 3-வது மண்டலமான நோவ்கோராடு ஒபியஸ்ட் மாகாண கவர்னர் ஆன்ட்ரி நிக்கிடின், துணை கவர்னர் போக்டோனாவ் எட்கினி ஆகியோர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று கூடங்குளத்திற்கு வந்தனர்.

ஆய்வு

அவர்களை அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் தலைமையில் ரஷிய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் வரவேற்றனர்.

பின்னர் ரஷிய குழுவினர் 3,4-வது அணுஉலை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு, மாலையில் புறப்பட்டு சென்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்