18 டன் ரேஷன் பொருட்களுடன் தலைகுப்புற கவிழ்ந்த லாரி

கோமுகி அணை அருகே 18 டன் ரேஷன் பொருட்களுடன் லாரி தலைகுப்புற கவிழ்ந்து.

Update: 2022-06-02 17:17 GMT

கச்சிராயப்பாளையம்:

சின்னசேலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து 18 டன் ரேஷன் பொருட்களுடன் கல்வராயன்மலை தாழ்தொரடிப்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி, கல்வராயன்மலை அடிவாரம் கோமுகி அணை அருகில் வளைவில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்