ஜூஸ் என நினைத்து திராவகத்தை குடித்தவர் சாவு

திருவாடானை அருகே ஜூஸ் என நினைத்து திராவகத்தை குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-20 18:45 GMT

தொண்டி,

திருவாடானை அருகே தெற்கு ஆண்டாவளி கிராமத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் அருள் ஜீவா (வயது 37). மனவளர்ச்சி குன்றியவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் வைத்திருந்த கழிப்பறை சுத்தம் செய்யும் திராவகத்தை ஜூஸ் என நினைத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் எஸ்.பி பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்