தூத்துக்குடியில் மினிவேனில் பதுக்கியிருந்த 360கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில் மினிவேனில் பதுக்கியிருந்த 360கிலோ ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update:2022-10-22 00:15 IST

தூத்துக்குடி பறக்கும் படை தாசில்தார் ஞானராஜ், துணை தாசில்தார் செந்தில் முருகன் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி கதிரேசன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த மினிவேனை சோதனை செய்தனர். அப்போது, அதில் 360 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்