நகைக்கடையில் திருடியமேலும் 2 பேர் கைது
எட்டயபுரத்தில் நகைக்கடையில் திருடிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக்கடையை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இத்திருட்டு வழக்கில் நேற்று முன்தினம் தூத்துக்குடி கோரம்பள்ளம் இறைச்சிக்கடை வியாபாரி அருணாச்சலத்தை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் நேற்று தூத்துக்குடி மடத்தூர் துரைக்கனி நகரை சேர்ந்தமினி வேன் டிரைவரான மாரிச்செல்வம் (30), மடத்தூர் துரைக்கனி நகர் வாழாவெட்டி முத்து மகன் நவீன் சிவா (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.