கால்வாயில் தவறி விழுந்த பள்ளிக்கூட மாணவன் சாவு

திருச்செந்தூரில் தூண்டிலில் மீன்பிடித்து கொண்டிருந்த பள்ளிக்கூட மாணவன் கால்வாயில் தவறி விழுந்து பலியானான்.

Update: 2022-11-25 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் தூண்டிலில் மீன்பிடித்து கொண்டிருந்த பள்ளிக்கூட மாணவன் கால்வாயில் தவறி விழுந்து பலியானான்.

பள்ளிக்கூட மாணவன்

திருச்செந்தூர் முத்துமாலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். தொழிலாளி. இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும், மணிகண்டன் (13) என்ற மகனும் உண்டு.

மணிகண்டன் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது வலிப்பு நோய் வருமாம். இதற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவனுக்கு பெற்றோர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளான். கடந்த 23-ந் தேதி பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் மணிகண்டன் இல்லை. அவனை பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

கால்வாயில் பிணம்

நேற்று முன்தினம் குலசேகரன்பட்டினம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே கால்வாயில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது, அது மணிகண்டன் என தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்ெசந்தூர் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மணிகண்டன் கால்வாயில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதால், கால்வாய் தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்