வீடு புகுந்து 10 பவுன் நகைகள் கொள்ைள

பொள்ளாச்சியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-01 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காய்கறி வியாபாரி

பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ. மில் வீதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 58). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது மகன் கல்லூரிக்கு சென்று விட்டார். முருகானந்தம், கடைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும் சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வீட்டை பூட்டி விட்டு கடைக்கு வந்துவிட்டார்.

பின்னர் மதிய சாப்பாட்டிற்கு முருகானந்தம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, பணம் கொள்ளை போயிருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்தே இந்த கொள்ளை நடந்து உள்ளது. இதனால் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்