மனைவியை அடித்து துன்புறுத்திய போலீஸ்காரர் மீது வழக்கு

போடி அருகே மனைவியை அடித்து துன்புறுத்திய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-07-10 18:45 GMT

போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அழகேஸ்வரிக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் 2013-ம் ஆண்டு காமராஜ்க்கு திருப்பூரில் போலீஸ் வேலை கிடைத்தது. இதனால் அவர் குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்று வசித்து வந்தார். இந்த நிலையில் போடி அனைத்து மகளிர் போலீசில் அழகேஸ்வரி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை கணவர் காமராஜ் அடித்து துன்புறுத்தி வருவதாகவும், குழந்தை இல்லாததால் வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக கூறி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் காமராஜ் மற்றும் உறவினர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்