லஞ்சம் கேட்டு டிரைவரை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
லஞ்சம் கேட்டு டிரைவரை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;
லஞ்சம் கேட்டு டிரைவரை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைச்சாவடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தும், நுழைவு கட்டணம் வசூல் செய்தும் அனுப்பி வைப்பார்கள்.
இந்த நிலையில் கடந்த2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று வந்து உள்ளது.
தாக்குதல்
அந்த வேனை அங்கு பணியில் இருந்த வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் தடுத்து நிறுத்தினர். பின்னர் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் டிரைவருக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும் சரக்கு வேன் டிரைவரை வனத்துறை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பணி இடைநீக்கம்
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து லஞ்சம் கேட்டு சரக்கு வேன் டிரைவரை தாக்கிய வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.