இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய பக்ரீத் வாழ்த்துகள் - த.வெ.க. தலைவர் விஜய்

ஒவ்வொரு ஆண்டும் 12-வது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

Update: 2024-06-17 03:48 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12-வது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்