அனுமன் ஜெயந்தி விழா
பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியில் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு நேற்று இந்த கோவிலுக்கு குற்றாலத்தில் இருந்து 11 குடங்களில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை, வெற்றிலை மாலை, மற்றும் துளசி மாலை, முறுக்கு மாலை சாத்தி வழிபட்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.