தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை;

Update: 2023-05-17 18:45 GMT

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொறக்குடி தேவாதிநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). கூலித்தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுரேசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு சுரேஷ் மனைவி அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்