தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-25 20:11 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் குரு லட்சுமி (வயது 25). இவரது கணவர் சதீஷ்குமார் (40). இவர் கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நரசிங்கபுரத்தில் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறைக்காக மடத்து பட்டி வந்திருந்தார். மூல நோயால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருலட்சுமி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்