தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

பிரம்மதேசம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-09-28 18:30 GMT

பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57) தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வேல்முருகன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்