பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-15 15:19 GMT

விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவர்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே கே.வி.பழனிசாமி நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், மில் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு சுவேதரசி என்ற மகளும், சிவின் (வயது 18) என்ற மகனும் உண்டு. சிவின் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவர் தன்னை கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்து விடுமாறு தந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் தந்தை வாசுதேவன், நமக்கு அந்தளவுக்கு வசதி இல்லை. எனவே பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படி என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவர் சிவின் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு வேலை முடிந்து மில்லில் இருந்து வந்த வாசுதேவன் கதவைத் தட்டி பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாதால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரும்பிய கல்லூரியில் சேரமுடியாமல் போனதால் மனமுடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்