தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

மனைவி கோபித்து கொண்டு சென்றதால் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-15 20:29 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 40)கார் டிரைவர். அவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபிநாத் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபிநாத் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது கோபிநாத் உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்