நெகமம்
நெகமம் சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சேகர்(வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி தனலட்சுமி(40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் சேகர் கடந்த சில மாதங்களாக கை வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.