தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

தற்கொலை;

Update: 2022-12-16 20:49 GMT

கோபியை அடுத்த திங்களூர் அருகே உள்ள போலநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 49). வேன் டிரைவர். இவருடைய மனைவி அன்னக்கொடி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு பழனிச்சாமி வந்து உள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்டு மறுநாள் தனது 2 மகள்களுடன், அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு பழனிச்சாமி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் பழனிச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்