கோவில் நிலம் ஒப்படைப்பு

கோவில் நிலம் ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-09-14 13:35 GMT

சிவகிரி:

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சிவகிரி அருகே தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து அந்த நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில், தாசில்தார் பூதத்தான் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்