மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட பொருளாளர் முத்துவேல், மாவட்ட துணை தலைவர் சாந்தி, ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், தலைவர் செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் அஞ்சலை மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட குழு உறுப்பினர் சிவா நன்றி கூறினார்.