பாப்பாரப்பட்டியில் நலிவடைந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்-நெசவாளர்களுக்கு அரசு கை கொடுக்குமா?

Update: 2022-10-05 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி பகுதியில் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவுத்தொழில் நலிவடைந்து வருவதால் ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கைத்தறி நெசவுத் தொழில்

தர்மபுரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கைத்தறி நெசவுத் தொழிலில் சிறப்பிடம் பெற்றது பாப்பாரப்பட்டி. ஆங்கிலேயர் காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். இத்தகைய சிறப்பு மிக்க பாப்பாரப்பட்டியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை பெற்று வந்தனர்.

கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு கடந்த காலத்தில் சட்டை, பேண்ட், கொசு வலை, பெட்சீட், துண்டு, கால் மிதியடி உள்ளிட்ட பல்வேறு வகையான துணி வகைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் கிடைத்து வந்தன. காலப்போக்கில் இவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர் குறைந்துவிட்டது.

நலிவடையும் கைத்தறி நெசவு

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் கைத்தறி நெசவு தொழில் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. அறிஞர் அண்ணா தொழிலியல் கூட்டுறவு கைத்தறி நெசவு சங்கம், அவ்வையார் நெசவு சங்கம், பாரதமாதா கூட்டுறவு நெசவு சங்கம் ஆகியவை தற்போது குறைந்த நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இது தவிர 3 கைத்தறி நெசவு சங்கங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது செயல்படும் சில சங்கங்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் பள்ளி சீருடை, துண்டு ஆகியவற்றிற்கான ஆர்டர்கள் ஓரளவு கிடைத்து வருகின்றன.

இவை கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி இந்த பகுதியில் வசித்து வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. இதனால் கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி இந்த பகுதியில் வசிக்கும் நெசவாளர்களில் கணிசமானோர் சமையல் தொழில், விருந்து பரிமாறும் தொழில், வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு மாற்று தொழில்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

சமூக பாதுகாப்பு திட்டம்

இந்த பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த பாரம்பரிய நெசவுத்தறிகள் தற்போது பயன்பாடு இன்றி சிதிலமடையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. இருந்த போதிலும் பாரம்பரியமான கைத்தறி நெசவுத் தொழிலை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கைத்தறி நெசவுத் தொழில் மூலம் மிக குறைந்த வருமானமே கிடைக்கிறது.

எனவே கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் சந்தையில் அதிக தேவையுள்ள ரகங்களை நெசவு செய்வதற்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு அரசு கை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகும்.

இதுதொடர்பாக நெசவாளர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

குறைவான கூலி

பாப்பாரப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்:-

பாப்பாரப்பட்டி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு பெற்ற கைத்தறி நெசவு தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. இங்கு நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த கைத்தறிவு நெசவு தறிகளில் பெரும்பாலானவை இப்போது பயன்பாடு இன்றி சேதம் அடைந்து வருகின்றன. கைத்தறி நெசவுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஒரு நாளில் ரூ.200 கிடைப்பதே சிரமமாக உள்ளது.

சில துணி வகைகளை கைத்தறி நெசவு மூலமே தயார் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நலிவடைந்த நிலையில் உள்ள கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்களை உரிய நிதி உதவி அளித்து மேம்படுத்த வேண்டும்.

சிறப்பு மானியங்கள்

நெசவுத் தொழிலாளி மீனாட்சி:-

மேலும் செய்திகள்