ஆரல்வாய்மொழி அருகே காரில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்

ஆரல்வாய்மொழி அருகே சொகுசு காரில் கடத்திய ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-24 21:21 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே சொகுசு காரில் கடத்திய ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குட்கா கடத்தல்

வெளிமாநிலத்தில் இருந்து குமரிக்கு காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் முப்பந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு சொகுசு கார் சாலையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தது. போலீசார் காரின் அருேக சென்று சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே காரை பறிமுதல் செய்து அதில் இருந்த 2 பேரையும் பிடித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

ரூ.4 லட்சம்

தொடர்ந்து நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெலூரைச் சேர்ந்த லட்சுமண குமார் (வயது27), மகேந்திரகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர்கள் புகையிலை மற்றும் குட்காவை கர்நாடக மாநிலம் பெங்களூரு காதிமார்க்கெட் பகுதியில் இருந்து குமரிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 187 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்